உலக அமைதி வேண்டி விஸ்வசித்தி மஹா யாகம்
ADDED :2999 days ago
ஈரோடு: உலக அமைதி வேண்டி, ஈரோட்டில், விஸ்வசித்தி மஹா யாகம் நடந்தது. ஈரோடு, காரைவாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி, உலக அமைதி, மன சாந்தி கிடைக்க வேண்டி, நேற்று விஸ்வசித்தி மஹா யாகம் நடந்தது. இதையொட்டி கடம் தீர்த்தம், அபிஷேகம், மஹா தீபாராதனை, புஷ்பாஞ்சலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுயம்பு நாகர் ஆலய நிர்வாகிகள், தமிழ்நாடு விஸ்வகர்ம கை வினைஞர்கள் சங்கம் மற்றும் கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவையினர் செய்திருந்தனர்.