உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனத்தில் நம்மாழ்வார் சபையின் 23ம் ஆண்டு வைணவ மாநாடு

திண்டிவனத்தில் நம்மாழ்வார் சபையின் 23ம் ஆண்டு வைணவ மாநாடு

திண்டிவனம்: திண்டிவனம் நம்மாழ்வார் சபையின் 23ம் ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. மாநாட்டையொட்டி, லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் இருந்து, டி.கே.பி.,திருமண மண்டபத்திற்கு பஜனை வீதியுலா நடந்தது. மாநாட்டிற்கு நம்மாழ்வார் சபை செயலாளர் ரகுபதி ராமானுஜதாசர் வரவேற்றார். மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். ரகுவீரபட்டாச்சாரியார் தலைமையுரையாற்றினார். சீனுவாச ராமானுஜதாசர் பங்கேற்று, ’யதிபதியும் சுருதிபதியும்’ என்ற தலைப்பிலும், தேவராஜ் சுவாமிகள், ’மாறனும் மங்கைமன்னனும்’ என்ற தலைப்பிலும், மதுரை ஜெகன்நாத பராங்குச ராமானுஜதாசர் பங்கேற்று, ’அபயதானத்தின் அருமை’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினர். மாநாட்டில், நம்மாழ்வார் சபையினர் ஹரிநாமசங்கீர்த்தன பஜனை நிகழ்த்தினர். மாநாட்டில், திண்டிவனம் குமுதவள்ளி நாச்சியார் பஜனை சபை, பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர், ஆண்டாள் நாச்சியார் பஜனை சபை, லட்சுமி நாராயணபெருமாள் பஜனை சபை, திருமங்கை பஜனை சபை, ஆதிகேசவ பக்த சபை உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பக்த சபைகளை சேர்ந்த உறுபினர்கள் கலந்து கொண்டனர். வெங்கடேச ராமானுஜதாசர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !