கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :5112 days ago
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, தொடர்ந்து 10 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சந்தனம், நெய், பன்னீர், விபூதி, இளநீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்தனர்.மாலை 5 மணிக்கு நடந்த சுவாமி கொலு விருத்தல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.