சுந்தர வரதராஜ பெருமாள் 23ம் தேதி திருவீதி உலா
ஊத்துக்கோட்டை: புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான வரும், 23ல் சுந்தர வரதராஜ பெருமாள் கஜ வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் உள்ளது, சுந்தரவரதராஜ பெருமாள் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாதத்தை ஒட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் முதல் சனிக்கிழமை உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்தாண்டு பக்தர் ஒருவர் வழங்கிய கஜ வாகனத்தில், 23ம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்னதாக, அன்றைய தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்படும். காலை, 11:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.