செல்வியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு
ADDED :2933 days ago
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்கூர் வழிவிடுமுருகன், செல்வியம்மன் கோயில், ஆத்கொத்தங்குடி வீரமாகாளியம்மன் கோயில்களில் புரட்டாசி நவராத்திரியை முன்னிட்டு கொலு உற்சவம் நடந்தது. செல்வியம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவ கொலு சாந்தா தலைமையில் நடந்தது. நவராத்திரி கொலு உற்ஸவத்தை முன்னிட்டு பஜனை, அன்னதானம் நடந்தது.*புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு முதுகுளத்துார் அருகே ஆதங்கொத்தங்குடியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், பெருமாள் உற்சவர் அலங்காரங்கத்தில் அருள்பாலித்தார். திருச்சியிலிருந்து நிர்வாக கமிட்டி உறுப்பினர் குமார் தலைமையில் பூ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை், பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.