மூன்றாம் பிறை ரகசியம்
ADDED :3037 days ago
ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவளான சரஸ்வதிக்கு கலைமகள் என்று பெயர். கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே செல்லும். தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லா கலைகளையும் கற்று விட முடியாது. இதை கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று சொல்வர். சிவபெருமான் போல, சரஸ்வதியின் தலையிலும் மூன்றாம் பிறை இருக்கும். சகலகலாவல்லியான அவளே பிறை அளவுக்கு, கலைகளை சிறிதளவே கற்றுக் கொண்டிருப்பதாக அடக்கமுடன் இருக்கிறாள். அதனால் எவ்வளவு பெரிய கல்வியாளராக இருந்தாலும் அடக்கம் அவசியம்.