சிவகாம சுந்தரிக்கு நவராத்திரி விழா
ADDED :3046 days ago
திருவள்ளூர் : மணவாள நகரில் உள்ள நால்வர் திருமடத்தில், சிவகாம சுந்தரிக்கு நவராத்திரி விழா நடைபெறுகிறது. மணவாள நகர் அடுத்த, நால்வர் திருமடத்தில், சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஞான வளாகத்தில் அமைந்து உள்ளது. சிவகாம சுந்தரி அம்மைக்கு நவராத்திரி விழா, 21ம் தேதி துவங்கியது. திருமடத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் துதி பாடல்கள் பாடி, மாலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. முதல் மூன்று நாட்கள், துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மூன்று நாட்களில், மலைமகள் அலங்காரமும், கடைசி மூன்று நாட்கள் கலைமகள் அலங்காரமும் நடை பெறுகிறது.