இளமநாயகி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2932 days ago
மேலுார், மேலுார் அரிட்டாபட்டி இளமநாயகி அம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும். நேற்று மதியம் கிராம மந்தையில் இருந்து பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து 3 கி.மீ., தொலைவில்உள்ள இளமநாயகி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், சப்த கன்னிகள் எனப்படும் ஏழை குழந்தைகள் பூக்கூடை சுமந்தும் சென்றனர்.மழை பெய்து விவசாயம் செழிக்கவும், எல்லா வளமும் கிடைக்கவும் பக்தர்கள் வாழைமட்டை பிரிசுற்றி தேத்தாண்டி எனப்படும் மாறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.