குளபதம் கோயிலில் எருது கட்டு விழா
ADDED :2930 days ago
கீழக்கரை, கீழக்கரை அருகே குளபதம் கிராமத்தில் உள்ள அரசாளப் பிறந்த முத்தாரம்மன், அலகுத்தி அய்யனார் கோயிலில் புரட்டாசி மாத முளைக்கொட்டு விழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா நடந்து வருகிறது. கோயில் முன்புறம் உள்ள பெரிய விளையாட்டு மைதானத்தில் நேற்று எருதுகட்டு விழா நடந்தது. மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் பொங்கலிட்டனர். நேர்த்திக்கடன் பக்தர்கள் மண்ணாலான பொம்மைகளை செய்து வழிபாடு செய்தனர். கமுதி, முதுகுளத்துார், சிவகங்கை, காஞ்சிரங்குடி, சிராவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 20 காளைகள் களம் இறங்கின.