சதாசிவ பிரம்மேந்திராளுக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை
ADDED :2973 days ago
கரூர்: பவுர்ணமி பூஜையை முன்னிட்டு, சதாசிவ பிரம்மேந்திராளுக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜைகள் நடந்தன. கரூர் அருகே, நெரூர் காவிரிக் கரையில் சதாசிவ பிரம்மேந்திராள் சுவாமிகள் அதிர்ஷ்டானம் உள்ளது. இதன் முன் உள்ள, சிவன் சன்னதியில் மூலவருக்கும், விசாலாட்சி சன்னதியிலுள்ள மூலவருக்கும், பவுர்ணமியான நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடத்தப்பட்டு, பூஜைகள் நடந்தன. சிவன் சன்னதிக்கு பின்புறம் உள்ள, சதாசிவ பிரம்மேந்திராளுக்கு அனைத்து திரவியங்களால், சிறப்பு அபி?ஷகம் நடத்தப்பட்டது. பின்னர், அங்குள்ள வன்னிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கரூர், திருச்சி, புதுக்கோட்டையிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.