உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ேஹாமம்

சுப்ரமண்ய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ேஹாமம்

பரமக்குடி: பரமக்குடி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி கோயிலில் 8 ம் ஆண்டு சத்ரு சம்ஹார ேஹாமம் நடந்தது. முன்னதாக அக். 9 ல் காலை7:00 மணி முதல் அனுக்ஞை, விநாயகர் வழிபாடு நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து ேஹாமங்கள், மகாபூர்ணாகுதிக்குப் பின்னர் காலை 10:30 மணிக்கு சுப்ரமண்ய சுவாமிக்கு திரவிய அபிேஷகம், கும்ப அபிேஷகம் நடந்தது. முருகனுக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவை ஆலய அர்ச்சகர்கள் அம்பி, சிவா பட்டர்கள் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !