உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனியாண்டர் கோவிலில் நாளை கார்த்திகை தீபம்

பழனியாண்டர் கோவிலில் நாளை கார்த்திகை தீபம்

நாமக்கல்: கூவைமலை பழனியாண்டவர் கோவிலில், நாளை (டிச., 8) கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.நாமக்கல் அடுத்த பேளுக்குறிச்சியில் உள்ள கூவைமலையில் பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை (டிச., 8) காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தீபத்திருவிழா துவங்குகிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை அபிஷேகமும், தீபாராதனையும், காலை 10 மணிக்கு சொற்பொழிவும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு இசைக் கச்சேரி, மாலை 5 மணிக்கு மகாதீபம் ஏற்றுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் தங்கமணி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி, துணை சபாநாயகர் தனபால், கலெக்டர் குமரகுருபரன், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சாந்தி, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் நடனசபாபதி, தமிழ்செல்வன், சந்திரசேகர், மாணிக்கம், அருள்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !