அரங்கநாதர் கோவில் சிறப்பு உண்டியல்களில் ரூ.2.29 லட்சம் வசூல்
ADDED :2912 days ago
ஈரோடு: அரங்கநாதர் கோவில், சிறப்பு உண்டியலில், இரண்டு லட்சம் ரூபாய் வசூலானது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்நாதர் கோவிலில், புரட்டாசி மாதத்தை ஒட்டி, பக்தர்கள் காணிக்கை செலுத்த, மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டன. அதில் மொத்தம், இரண்டு லட்சத்து, 29 ஆயிரத்து, 613 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்து. அறநிலையத்துறை துணை ஆணையர் முருகையா, செயல் அலுவலர் முத்துசாமி, ஆய்வாளர் பாலசுந்தரி கலந்து கொண்டனர்.