தீபாவளி லேகியம்
ADDED :3106 days ago
தீபாவளி பலகாரங்கள் எளிதில் ஜீரணம் ஆக வீட்டிலேயே லேகியம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு – 25 கி
சீரகம் – 25 கி
இஞ்சி – 50 கி(தோல் சீவியது)
சுக்கு – ஒருதுண்டு (துாளாக்கியது)
திப்பிலி – 10 கி
நெய் – 100 கி
வெல்லம் – 200 கி
தேன் – நான்கு டீஸ்பூன்
செய்முறை:மிளகு, சீரகம், இஞ்சியை தண்ணீரில் அரைமணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து (வடிகட்டவும்) அரைத்த விழுதை வெல்ல நீரில் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கொதித்து கெட்டியானவுடன் நெய் சேர்க்கவும். ஆறியவுடன் தேன் விட்டுக் கிளறி பாட்டிலில் எடுத்து வைக்கவும். வாயு தொந்தரவு, அஜீரணம், வயிற்று வலிக்குச் சிறந்த மருந்து.