உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் கந்தசஷ்டி விழா துவக்கம்

காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் கந்தசஷ்டி விழா துவக்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குமரகோட்டத்தில், இன்று கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக, காஞ்சிபுரம் குமரகோட்டம் திகழ்கிறது. இங்கு கந்தசஷ்டிப் பெருவிழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்கி, 27ல், தெய்வானை பந்தம்பறி ஊடல் நிகழ்வுடன், விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதுபோலவே, மாவட்டத்தில், வல்லக்கோட்டை, குன்றத்துார், திருப்போரூர் கோவில்களிலும், இன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது.

நிகழ்ச்சி நிரல்
தேதி    காலை விழா    இரவு விழா


அக்., 20    கொடியேற்றம்    ஆடு வாகனம்
அக்., 21    பல்லக்கு    மான் வாகனம்
அக்., 22    பல்லக்கு    அன்ன வாகனம்
அக்., 23    பல்லக்கு    மயில் வாகனம்
அக்., 24    பல்லக்கு    குதிரை வாகனம்
அக்., 25    கந்தசஷ்டி    சூரசம்ஹாரம்
அக்., 26    திருக்கல்யாணம்
அக்., 27    கந்தபொடி வசந்தம்    தெய்வானை பந்தம்பறி ஊடல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !