திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்
ADDED :5057 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தீப தரிசனம் செய்தனர்.நேற்று மாலை 5.30 மணிக்கு கம்பத்தடி மண்டத்தில் எழுந்தருளிய அனுக்ஞை விநாயகர் முன் பூஜைகள் முடிந்து, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை சன்னதியில் பால தீபம் ஏற்றப்பட்டது. மலைமேல் உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகே மண்டபம்மேல் பகுதியில் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை வைக்கப்பட்டு, அதில் 120 கிலோ நெய் ஊற்றி, 120 மீட்டர் காடா துணியை திரியாக்கி வைத்து, நுனியில் 5 கிலோ சூடம் வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தீப தரிசனம் செய்தனர்.