உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா

சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா

அழகர்கோவில்: அழகர்கோயில் மலை மீது சோலைமலை முருகன் கோயிலில் நேற்று கார்த்திகை திருவிழா நடந்தது. மாலை மூன்று மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடந்தன. பின், ஐந்து மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்தார். மாலை ஆறு மணிக்கு கோயிலில் கார்த்திகை மகாதீபமும், தொடர்ந்து சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். டிச., 12ல் கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !