உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / "கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை

"கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை

திருப்பூர்;""பூகோளம், சரித்திரம், இதிகாசம், இலக்கியம் என எல்லாமே கந்தபுராணத்தில் உள்ளது; கந்த புராணத்தில் இல்லாதது, எந்த புராணத்திலும் இல்லை என, சொற்பொழிவாளர் ருக்மணி பேசினார்.கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கந்தபுராணம் தொடர் சொற்பொழிவு, கடந்த, 21ம் தேதி முதல், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்து வருகிறது. மூன்றாவது நாளில், சொற்பொழிவாளர் ருக்மணி பேசியதாவது:உலகம் முழுவதும் முருக பக்தர்கள் உள்ளனர்; முருகன் வழிபாடும் உள்ளது. முருகனின் பெயர், வாகனமான மயில், ஆயுதமான வேல் என, எல்லாவற்றின் பெயரிலும், மனிதர்கள் பெயர் உள்ளது. இது, வேறெந்த கடவுளுக்கும் இல்லாத ஓர் சிறப்பு. கந்தபுராணத்தில், பூகோளம், சரித்திரம், இதிகாசம், இலக்கியம் என, எல்லாமும் உள்ளது; கந்த புராணத்தில் இல்லாதது, வேறு எந்த புராணத்திலும் இல்லை.

தாயாரிடம் வேல் வாங்கிய முருகன், திரு பர்வதம், கேதாரம் கடந்து காசி வருகிறார். காசி என்பது, ஆசைகளை அழிக்கின்ற இடம். அங்கிருந்து எதையும் எடுத்துவரக்கூடாது; விட்டு வரவேண்டும். காசியில் இருந்து புறப்பட்டு, திருவேங்கடம் வந்து, காளகஸ்தியை அடைகிறார். காளம் என்றால், சிலந்தி; அத்தி என்றால், யானை; அதாவது, சிலந்தியும், யானையும் வழிபாடு நடத்திய இடம் என பொருள். காளகஸ்தியில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூ ரை அடைகிறார். திருச்செந்தூர் முருகனோ, சிற்ப சாஸ்திரத்துக்கு கட்டுப்படாதவர். இங்கே, முருகன் கையில் வேல் இருக்காது; மலர் இருக்கும். படைக்கலன்களோடு தங்கிய முருகன், பூஜை செய்கிறார். அப்போது அங்குவந்த தேவர்களுக்கு காட்சிதர, முருகன், கையில் பூஜை செய்த மலரோடு, திரும்பினார். அதனாலேயே, திருச்செந்தூர் முருகன், கையில் மலரோடு காட்சி தருகிறார், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !