உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் இன்று சூரசம்ஹாரம்

திருப்போரூரில் இன்று சூரசம்ஹாரம்

திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, இன்று மாலை நடைபெறுகிறது.திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்த சுவாமி கோவிலில், 20ல், கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கந்தசுவாமி பெருமான், அசுரர்களை வதம் செய்யும், சூரசம்ஹாரம், இன்று மாலை கோலாகலமாக நடக்கிறது. காலை லட்சார்ச்சனை முடிந்து, கந்தசுவாமி பெருமான், சரவணப்பொய்கை குளத்தில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். பின், யாகசாலை கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !