உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல மதிப்பெண் பெற வழி

நல்ல மதிப்பெண் பெற வழி

சில மாணவர்கள் மேம்போக்காக பாடங்களைப் படிப்பதால், மதிப்பெண் குறைகிறது. ஆழ்ந்து படித்தால் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். மார்டீன் ¿uர்கிங் புத்தகங்களை ஆழ்ந்து படிப்பார். பைபிளைப் படித்த அவர், வேதத்தை கையில் எடுக்கும் போதெல்லாம் பழம் நிறைந்த சோலைக்குள் செல்வதாக நினைக்கிறேன். முழு பைபிளையும் ஒரு ஆப்பிள் மரமாக பார்க்கிறேன். அதன் அடிப்பகுதியை பிடித்து பலத்துடன் உலுக்கும் போது, பழுத்த பழங்கள் கீழே விழும். பிறகு  ஒவ்வொரு கிளையாக உலுக்கிப்பார்க்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு சிறுசிறு கொப்பாக உலுக்கலாம். அதுபோலவே, வேதத்தை கையில் எடுக்கும்போது முழுப் புத்தகத்தையும் வாசித்து முடிப்பேன். பிறகு ஒவ்வொரு அத்தியாயமாக தியானிப்பேன். பின் ஒவ்வொரு வசனத்தையும் ரசித்துப் படிப்பேன், என்று சொல்வார். மாணவர்கள் பாடங்களை ஆழ்ந்துஅனுபவித்துப் படித்தால் அதிக மதிப்பெண் உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !