பால்சோறு தரும் அம்பிகை
ADDED :3298 days ago
காசியில் இருக்கும் அன்னபூரணி, அன்னம் அளிக்கும் தாயாக திகழ்கிறாள். கையில் பால் சோறு நிறைந்த பாத்திரமும், கரண்டியும் ஏந்தி நிற்கும் இவளை வழிபட்டால் வாழ்வில் உணவுக்கு குறைவிருக்காது. திருமூலரின் திருமந்திரம் அன்பே சிவம் என்று கூறுகிறது. அறிவான தெய்வமே என்று தாயுமானவர் சிவபெருமானை குறிப்பிடுகிறார். இந்த அன்பும், அறிவும் பெற விரும்பினால் அன்னபூரணியை வழிபட வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.