உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய் நீக்கும் முக்குடி பிரசாதம்!

நோய் நீக்கும் முக்குடி பிரசாதம்!

கேரள மாநிலம், இரிஞ்ஞாலக்குடா அருகில் உள்ள பரதன் கோயிலில், பரதன் தவக்கோலத்தில் காட்சி தருவதால் பூஜையின்போது வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் முக்குடி எனும் பிரசித்தி பெற்ற, வயிற்று வலியைப் போக்கும் பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாத செய்முறையை பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கின்றனர் என்பது விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !