உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலாதார கணபதி

மூலாதார கணபதி

விநாயகர் அகவலில் மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து எனப் பாடியுள்ளார் ஔவையார் யோக வித்தைக்கு ஆதாரமாக அமைவது மூலாதாரம் முழுமுதற் தெய்வமான கணபதியை மூலாதார கணபதியாகப் போற்றுவார்கள் அடியார்கள். திருவாரூர் தியாகேசர் சன்னிதியின் தூண் ஒன்றில் மூலாதார கணபதியைத் தரிசிக்கலாம். இந்த கணபதி தாமரை பீடத்தின்மீது நடனக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். கணபதியின் இந்தத் திருக்கோலம் ஆனந்தம் தரும் கோலம் என்பார்கள்! அனுதினமும் மூலாதார கணபதியைத் தரிசித்து வழிபடுவதால், நம்முள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும்; மனதில் நல்ல எண்ணங்களே மேலோங்கும் அதனால் நற்காரியங்கள் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !