உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம்

கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம்

நத்தம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சாணார்பட்டி: ஆவிளிபட்டியில் உள்ள அபிராமி சமேத ஆதி சுயம்பீஸ்வரர் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவன், நந்தி, அபிராமி ஆகிய சுவாமிக்ளுக்கு அபிஷேகங்களை தொடர்ந்து பூஜைகள் நடந்தது. கோயில் பசுவிற்கு காப்பரிசி வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் சிவபுராண புத்தகம் வழங்கப்பட்டது. கோயில் அறங்காவலர் உதயகுமார் சிவாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !