உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் மாகாளியம்மன் கோவிலில், ஐப்பசி பவுர்ணமி விழா

பொள்ளாச்சியில் மாகாளியம்மன் கோவிலில், ஐப்பசி பவுர்ணமி விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலில், அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, ருத்ரலிங்கேஸ்வரருக்கு, 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒடையகுளம் ராஜ ராஜேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, ஈசன் அன்னாபிஷேக திருக்காட்சி தந்தருளல், மாலை 6:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி யும் நடந்தது.

இரவு, 7:00 மணிக்கு, 108 சிவமந்திரம் அர்ச்சித்தல், இரவு, 7:45 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவி லில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் மற்றும், மாலை, 5:30 மணிக்கு அன்னத்தால் அலங் கரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், மாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அன்னாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !