பாலசமுத்திரம் பெருமாள் கோயில் நவ.30ல் கும்பாபிஷேகம்
பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் திருப்பணிகள் முடிந்து நவ.,30ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.பழநி முருகன் கோயிலைச்சார்ந்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு ஆவணி பிரம்மோற்ஸவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1996ல் மகாகும்பா பிஷேக விழா நடந்தது. அதன்பின் தற்போது ரூ.95 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கோபுரங்கள், சிலைகள், புதிய தரைத்தளம், முன்மண்டபம் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளதால் வரும் நவ.,30ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் வரும் நவ., 8 ல் முகூர்த்தக்கால் நடப்படும். இதை போல கிரிவீதி அழகுநாச்சியம்மன்கோயிலில் டிச., 6 ல் கும்பாபிேஷகம் நடைபெறஉள்ளது. பெரியநாயகியம்மன் கோயிலில் யாகசாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது,என்றார்.