வாஸ்து தோஷம் நீங்கும்!
ADDED :3289 days ago
நாகை மாவட்டம் திருப்புகலூர் தலத்திலுள்ள வாஸ்து நாதர் கோயிலுக்குச் சென்று மூலவரை வழிபட்டால் நிகழ்காலத்தில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி வாழ்க்கை வளமாகும். இக்கோயிலின் பிராகாரத்தில் உள்ள பூதேஸ்வரரை வணங்கினால் பித்ரு தோஷத்துடன் கடந்த கால பாவங்கள் யாவும் விலகும். இங்குள்ள பவுட்சேஸ்வரரை வழிபட்டால் எதிர்காலம் பிரகாசமாகும். ஆக, முக்காலத்திற்குரிய மூன்று சிவ லிங்கங்களை இங்கு மட்டுமே ஒரு சேர தரிசிக்கலாம். இத்தல மூலவரான வாஸ்து நாதரை மூன்று செங்கற்களுடன் சென்று வழிபட்டு, ஈசான மூலை, அக்னி மூலை மற்றும் பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டினால் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.