திருத்தணியில் கிருஷ்ணர் உற்சவம்
ADDED :2987 days ago
திருத்தணி: திருத்தணியில் நடந்த கிருஷ்ணர் கல்யாண உற்சவவிழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி – அரக்கோணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில், கிருஷ்ணர் கல்யாண உற்சவம் விழா, நேற்று முன்தினம், வெகு விமரிசையாக நடந்தது. உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. பின், அங்கு நடந்த,கல்யாண மாலை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக பரிகார பூஜைகள் நடந்தன.