உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறுமை... பொறுமை

பொறுமை... பொறுமை

மனிதனுக்கு பொறுமை அவசியம். எந்த சமயத்திலும் உணர்ச்சி வசப்படாதிருப்பதே நல்லது. இயேசுவுக்கு முந்தைய காலத்தில் வசித்த, ஆபிரகாமின் வீட்டுக்கு ஒரு ஏழை வழிப்போக்கன் வந்தான்.  அன்போடு அவனை வரவேற்று உணவு கொடுத்தார். சாப்பாட்டை பார்த்த மாத்திரத்திலேயே அவன் வேகமாக சாப்பிட ஆரம்பித்து விட்டான்.  ஆபிரகாமுக்கு கோபம் வந்து விட்டது. ஏ முட்டாளே! சாப்பிடும் முன் இந்த உணவை உனக்களித்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தெரியாதா? இது  நீர் கொடுத்த உணவு, இது எந்நாளும் எல்லா மக்களுக்கும் கிடைக்கட்டும் என சொல்லத் தெரியாதா? என்று கடிந்து கொண்டார்.  ஆத்திரத்தில் அவனை வெளியே அனுப்பி விட்டார்.

அன்று ஆண்டவர் அவர் முன்னிலையில் தோன்றி, ஆபிரகாமே! இப்படி நீ செய்திருக் கலாமா? உன்னால் துரத்தப்பட்டு  கவலையுடன் செல்கிறானே, அவன் எழுபதாண்டுகளாக இப்படித்தான் செய்கிறான். அவன் திருந்துவான் என்று பொறுமையுடன் இருக்கிறேன். ஆனால், நீயோ அவனைப் பார்த்த முதல் நாளிலேயே, துரத்தி  விட்டாயே. அவனது ஜெபத்திற்காக  நீயும் பொறுமை காத்திருக்க வேண்டாமா? என்னைப் பொறுத்தவரை நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் சூரியன் மூலம் ஒளி தருகிறேன். எல்லாருக்கும் ஒரே மாதிரி மழை  தருகிறேன். இருதரப்பாரையும் ஒரே கண் ணோட்டத்தில் பார்ப்பது போல், நீயும் பார், என அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !