உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபடவேண்டிய இடங்களும்!

நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபடவேண்டிய இடங்களும்!

* அஸ்வினி - ஞான பைரவர் - போரூர்.
* பரணி - மகா பைரவர் - பெரிச்சியூர்.
* கார்த்திகை - அண்ணாமலை பைரவர் - திருவண்ணாமலை.
* ரோகிணி - பிரம்ம சிரகண்டீஸ்வரர் - திருக்கண்டியூர்.
* மிருக சீரிஷம் - க்ஷேத்ர பால பைரவர் - க்ஷேத்திர பாலபுரம்.
* திருவாதிரை - வடுக பைரவர் - வடுகூர்.
* புனர்பூசம் - விஜய பைரவர் - பழனி.
* பூசம் - ஆவின பைரவர் - ஸ்ரீவாஞ்சியம்.
* ஆயில்யம் - பாதாள பைரவர் - காளஹஸ்தி.
* மகம் - நர்த்தன பைரவர் - வேலூர்.
* பூரம் - பைரவர் - பட்டீஸ்வரம்.
* உத்தரம் - ஜடா மண்டல பைரவர் - சேரன்மாதேவி.
* அஸ்தான - யோகாசன பைரவர் - திருப்பத்தூர்.
* சித்திரை - சக்கர பைரவர் - தர்மபுரி.
* சுவாதி - ஜடா முனி பைரவர் - பொற்பனைக் கோட்டை.
* விசாகம் - கோட்டை பைரவர் - திருமயம்.
* அனுஷம் - ஸ்வர்ண பைரவர் - சிதம்பரம், ஆடுதுறை.
* கேட்டை - கதாயுத பைரவர் - சூரக்குடி.
* மூலம் - சட்டை நாதர் - சீர்காழி.
* பூராடம் - வீரபைரவர் - அவிநாசி, ஒழுகு மங்கலம்.
* உத்திராடம் - முத்தலை வேல் வடுகர் - கரூர்.
* திருவோணம் - மார்த்தாண்ட பைரவர் - வயிரவன் பட்டி.
* அவிட்டம் - பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளுர் (அஷ்ட பைரவர்கள் உறையும் பலிபீடம்)
* சதயம் - சர்ப்ப பைரவர் - சங்கரன் கோயில்.
* பூரட்டாதி - அஷ்டபுஜ பைரவர் - கொக்கரையான் பேட்டை.
* உத்திரட்டாதி - வெண்கல ஓசை பைரவர் - சேஞ்சலூர்.
* ரேவதி - சம்ஹார பைரவர் - தாத்தையங்கார் பேட்டை.

ஞாயிற்றுக் கிழமை: திருமணத்தடை நீங்க இராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபடவேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும். வழக்கில் வெற்றி கிட்டும்.

திங்கள் கிழமை: ராகு காலத்தில் பைரவருக்கு அல்லி மலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டகச் சனியின் துன்பம் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை: ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் படைத்து செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களிடையே வேற்றுமை நீங்கி ஒற்றுமை பலப்படும்.

புதன் கிழமை: ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து பயத்தம் பருப்பு சாதம் படைத்து, அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.

வியாழக் கிழமை: அன்று அல்லது தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு, சந்தனக் காப்பு அணிவித்து, மஞ்சள் நீற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக் கனி, ஆரஞ்சு, புளி சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வெள்ளிக்கிழமை: ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

சனிக்கிழமை: இராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ, மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !