உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :2983 days ago
உடுமலை : உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. கார்த்திகை மாத திங்கள்கிழமையையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிேஷக விழா நேற்று காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கலசபூஜை மற்றும் சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. 108 வலம்புரி சங்குகளுக்கு சங்காபிேஷகம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.