சனிப்பெயர்ச்சி ஹோமம்
ADDED :5118 days ago
ராசிபுரம்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ராசிபுரம், ஈ.பி., காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர், செல்வ விநயாகர் கோவிலில், டிசம்பர் 21ம் தேதி, சனிபெயர்ச்சி ஹோமம் நடக்கிறது. டிசம்பர் 21ம் தேதி, கன்னி ராசியில் இருந்து, துலாம் ராசிக்கு சனிபகவான் இடம் பெயர்கிறார். அதையொட்டி, ஈ.பி., காலனியில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில், அன்று காலை 6 மணிக்கு சனிபகவானுக்கு ஹோமம் நடக்கிறது. ஹோம நிகழ்ச்சியில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருட்சகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய, 12 ராசிக்காரர்களும் பங்கேற்று பலன் பெறலாம். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.