உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 160 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 160 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்

வேலூர்: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு, 160 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என, அரசு போக்குவரத்துக் கழக, வேலூர் கோட்ட மேலாண்மை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, டிச., 2 ல் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக, வேலூர் கோட்டம் சார்பில், டிச., 1 முதல், 3 வரை, மூன்று நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், வேலூரில் இருந்து, 100 பஸ்கள், திருப்பத்தூர், ஆற்காடு பகுதிகளில் இருந்து, தலா, 30 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் எண்ணிக்கைக்கு தக்கபடி, மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !