திருவண்ணாமலை தீப விழா: முதல் நாளில் வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் சுவாமி உலா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நாளான நேற்று இரவு உற்சவத்தில் வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழா நேற்று (நவ.,23) கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு உற்சவத்தில் வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெள்ளி அன்னவாகனத்தில் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரர், மயில் வாகனத்தில் சமேத வள்ளி தெய்வானையுடன் முருகர், மூஷிக வாகனத்தில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.