நாமக்கல் ராஜகணபதி கோவில் குடமுழுக்கு
ADDED :2896 days ago
நாமக்கல்: கணபதிபாளையம் ராஜ கணபதி, செல்லாண்டியம்மன் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபி?ஷகம் நடந்தது. மோகனூர் அடுத்த, கணபதிபாளையம் ராஜகணபதி, செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபி?ஷகம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதை முன்னிட்டு, கடந்த, 23 காலை, விநாயகர் வழிபாடு, கணபதி யாகம், மஹாலட்சுமி யாகம் நடந்து, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலை, இரண்டாம் காலம் நிறைவுபெற்று, காலை, 6:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை, 7:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபி?ஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் ராஜ கணபதி, செல்லாண்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.