உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்தா அபிஷேக பலன்கள்!

சாஸ்தா அபிஷேக பலன்கள்!

சாஸ்தாவுக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்கவல்லது.

தைலாபிஷேகம் - வியாதிகளை நாசம் செய்யும்.
திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள் - கடன் நிவாரணத்தை அளிக்கும்.
பஞ்சகவ்யம் - ஞானம் அருளும்.
பஞ்சாமிர்தம் - ஆயுள் விருத்தியை அளிக்கும்.
பசும்பால் - செல்வ வளத்தை அளிக்கும்.
தயிர் அபிஷேகம் - தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.
நெய் அபிஷேகம் - நோயற்ற வாழ்வு தரும்.
தேன் அபிஷேகம் - இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.
கருப்பஞ்சாறு - வம்ச விருத்தி உண்டாகும்.
பழச்சாறுகள் - தோற்றப்பொலிவைத் தரும்.
இளநீர் - சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.
சந்தன அபிஷேகம் - தான்ய லாபத்தையும் தேக சவுக்கியத்தையும் அளிக்கும்.
விபூதி அபிஷேகம் - ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.
புஷ்போதக அபிஷேகம் - ராஜ பதவியை அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !