துளசிமாலை அணிவது ஏன்?
ADDED :3268 days ago
எவ்வளவோ மாலைகள் இருந்தாலும், ஐயப்ப பக்தர்கள் துளசிமாலை அணிந்தே சபரிமலை யாத்திரைக்கு விரதம் தொடங்குகிறார்கள். ஹரிஹரசுதனான ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்ததும், அவனது தாயான திருமால், குளிர்காற்றினால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஐயப்பனின் கழுத்தில் துளசிமாலையில் ஒரு மணியைக் கட்டித்தொங்கவிட்டாராம். அதுதவிர மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தது துளசி. அதுவே ஐயப்ப பக்தர்கள் துளசிமாலை அணிவதற்கு முக்கியக் காரணம். இன்னொன்று, கார்த்திகை மழைக்காலம்; மார்கழி குளிர்காலம், அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது. மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் தினமும் இருவேளை குளிப்பதால் அவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்க துளசி உதவுகிறது.