உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: புருஷா முனி வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: புருஷா முனி வாகனத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில்,  ஒன்பதாம் நாளான இன்று(டிச.1) காலை உற்சவத்தில் புருஷா முனி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பெங்களூர், கொல்கத்தா பகுதியிலிருந்து பூக்களை கொண்டுவந்து,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தன்று சுவாமி சன்னதி உள்ள பிரஹாரத்தை சுற்றி வண்ண வண்ண  பூக்களால் வித விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று(டிச.1) காலை உற்சவத்தில் புருஷா முனி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !