கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
ADDED :2900 days ago
ஈரோடு: கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா, கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழா முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறக்குதல் நேற்று நடந்தது. கோவில், பூசாரிகள் ராஜா, பிரபு, குண்டத்துக்கு பூஜைகள் செய்து, இருவரும் முதலில் இறங்கினர். அவர்களைத் தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் இருந்த, ஏராளமான பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் குண்டம் இறங்கினர். அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.