உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா

கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்து. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், கோவிலைச் சுற்றி சுவாமி ஊர்வலம் நடந்தது. பின், ராஜகோபுர உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, கோவில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !