சேலம் பெருமாள் கோவில்களில் தீபத்திருவிழா கோலாகலம்
சேலம்: பெருமாள் கோவில்களில், தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. மாலை, ஆஞ்சநேயர், ஆண்டாளுக்கு பூஜை நடந்தது. இரவு, தேரில் அழகிரிநாதர் கோவிலை சுற்றி வலம் வந்தார். பின், கோவில் முன் உள்ள கம்பத்தில், விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.
* அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், மாலை, விஷ்ணு தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 1,008 தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட, சகஸ்ர தீப ஊஞ்சலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, கோவில் முன் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
* சின்னதிருப்பதி பெருமாள், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், சங்ககிரி, வி.என்.பாளையம், வசந்த வல்லபராஜ பெருமாள், தேவூர், வட்ராம்பாளையம் அண்ணாமலையார் உண்ணாமலையார் உள்பட, பல்வேறு பெருமாள் கோவில்களில், தீபம் ஏற்றப்பட்டது.