உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் தீபத்திருவிழா

பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் தீபத்திருவிழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகாவிஷ்ணு தீபத்திருவிழா நடந்தது.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில், மகாவிஷ்ணு தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சன சேவை, அலங்கார சேவையை தொடர்ந்து, மகா விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது. பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும், மகாவிஷ்ணு தீபத்திருவிழா நடந்தது.வால்பாறை நகைக்கடை வீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.தீபத் திருவிழாவில், 1,008 கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, விளக்கு பூஜை நடந்தது. விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !