திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம்
ADDED :2945 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல பூஜை, கொடியேற்று விழா, நேற்று நடந்தது. வரும், 11ல் ஆறாட்டு உற்சவம் மற்றும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. திருப்பூர், காலேஜ் ரோடு, சுவாமி ஐயப்பன் கோவிலில், 58வது ஆண்டு, மண்டல பூஜை, கடந்த மாதம், 17ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 4:30க்கு, மகா கணபதி ஹோமம், உற்சவம் துவக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 6:30 மணிக்கு, பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில், சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி, கண்டரு மோகனரு தலைமையில், மண்டல பூஜை உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. வரும், 11ம் தேதி பெருமாள் கோவிலில், ஐயப்பன் ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.