சபரிமலை அன்னதானத்திற்கு ராமநாதபுரம் காய்கறிகள்
ADDED :2867 days ago
ராமநாதபுரம் : சபரிமலை ஐயப்பசேவா சமாஜம் சார்பில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகம், கேரளாவில் அன்னதானம் மற்றும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் நகர் அனைத்து வியாபாரிகள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் நான்கு ஆண்டுகளாக சபரிமலையில் மண்டல பூஜை விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எரிமேலி, கூனங்கரா, சபரிமலை ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதற்காக, ராமநாதபுரத்தில் இருந்து 4 டன் அரிசி, 3 டன் காய்கறிகள், 1 டன் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டது. ராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோயில் வாசலில் இருந்து இதற்கான வாகனம் புறப்பட்டது. நகர் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள், சபரிமலை ஐயப்ப சேவா சாஜ நிர்வாகிகள் பங்கேற்றனர்.