மகாலட்சுமி குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2863 days ago
திண்டுக்கல் : சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி விஜயநகரத்தில் மகாலட்சுமி குபேரர் கோயிலில் குருவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் மகாலட்சுமி குபேரர் சித்திரலேகா அபிேஷக ஆராதனை நடந்தது. மகாஆரத்திக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மகாலட்சுமி வசிய ேஹாமம் நடந்தது. பின்னர் குபேரர் பிரசாதம் வழங்கப்பட்டது.