ஐயப்ப பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
ADDED :3196 days ago
கிருஷ்ணராயபுரம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், கணக்கம்பட்டி பகவதி அம்மன் கோவில் முன், குண்டம் இறங்கி வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, வயலூர் பஞ்சாயத்து, கணக்கம்பட்டி கிராமத்தில், சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும், ஐயப்ப பக்தர்கள் பகவதி அம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கணக்கம்பட்டி குருசாமிகள், ஜயப்ப பக்தர் கள் மற்றும் பொது மக்கள் செய்தனர்.