கார்த்திகை கடைசி சோம வாரம்: கோயில்களில் சங்காபிஷேகம்
ADDED :2862 days ago
மதுரை: கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, மதுரை சிவன் கோயில்களில் சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. புனித நீர் நிரப்பப்பட்ட, 1,008 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் வரப்பட்டு ஸ்வாமிக்கு, 1,008 சங்காபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. இது போல கடைசி சோமவரத்தையொட்டி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகள் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து, சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.