உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் லட்சதீப விழா கோலாகலம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் லட்சதீப விழா கோலாகலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று நடந்த லட்சதீபதிருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், நான்காவது சோமவாரம், லட்சதீப திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று மாலை , லட்சதீப திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். சுவாமிக்கு
மஹா அபிஷேகமும், 108சங்காபிஷேகமும், துாப தீப ஆராதனையும் நடந்தது.

வாகன நெரிசல்: ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில், பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெறாததாலும், பிற பணிகள் நிறைவடைந்தும் பள்ளங்கள் மூடப்படாததாலும், கோவிலுக்கு வந்த வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !