வனபோஜன உற்சவம்: கோசாலையில் வீரராகவர் எழுந்தருளல்
ADDED :2951 days ago
திருவள்ளூர், வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள், கோசாலையில் நேற்று, எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு, வனபோஜன உற்சவம் நேற்று நடந்தது. இதையடுத்து, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, டோல்கேட்டில் உள்ள தானப்ப நாயக்கன் மண்டபத்தில் உள்ள, கோசாலையில் எழுந்தருளினார். அங்கு, காலை, 8:30 மணியளவில், வீரராகவருக்கு அபிஷேகம் நடந்தது. அன்று முழுவதும் அங்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாலையில் புறப்பட்டு, வீரராகவர் கோவில் திரும்பினார். இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் உற்சவத்தில் பங்கேற்றனர்.