உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி ஏகாம்பரேஸ்வ ரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்த னர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பா ளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு
அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !